17 வயது மாணவன் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு
மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் தனது 2 நண்பர்களுடன் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது
வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.