சனத் நிஷாந்தவின் மரணம் சர்ச்சையை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீதி விபத்து தொடர்பில் சந்தேகம் நிலவுதாகவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை கோரி அவரின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தற்போது தங்கியுள்ள இல்லத்திற்கு சென்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் சாரதியின் நடத்தைகள் தொடர்பிலும் சிக்கல் நிலை காணப்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தமது கணவரின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.