ஐஸ்கிரீமில் தவளை - குற்றத்தை ஒப்புக்கொண்டவருக்கு 5000 ரூபா அபராதம்
குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம்
யாழ். செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) இறந்த தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஆலய சூழலில் குளிர்களி விற்பனையில் ஈடுபட்டவரிடம், கொள்வனவு செய்தவரின் குளிர்களிக்குள் இறந்த நிலையில் தவளை ஒன்று கிடந்துள்ளது.
அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் குளிர்களி விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குளிர்களியை விற்பனை செய்தவர், சுன்னாகம் பகுதியில் இயங்கும் குளிர்களி தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே, ஆலய சூழலில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.