பச்சிளம் குழந்தை ஒன்று தனியார் விடுதிக்குள் மீட்பு

இந்தியா - பூந்தமல்லி பகுதியில் சில நாட்களாக பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று தனியார் விடுதிக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பச்சிளம் குழந்தை ஒன்று தனியார் விடுதிக்குள் மீட்பு

இந்தியா - பூந்தமல்லி பகுதியில் சில நாட்களாக பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று தனியார் விடுதிக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்களாக அந்த குழந்தை அழுது கொண்டு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதை பார்த்த அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் குழந்தையினை  பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 

சென்னை பூந்தமல்லி கூடத்தில் உள்ள இராமானுஜர் தெருவில் ஒரு தனியார் பெண்கள் விடுதி செயல் பட்டு வருகிறது. இந்த விடுதியில் வெளிச்சம் வருவதற்காக ஒரு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து பூனை ஒன்றுஅழும்  குரல் ஒன்று கேட்டுள்ளதாகவும், பூனைதான் கத்துகிறது என்று அங்கிருந்தவர்கள் அலட்சியமாக விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக இந்த சத்தம் கேட்டதால் அங்கு இருந்த யுவராணி என்ற பெண் ஜன்னல் வழியாக பார்த்ததால் அந்த குழந்தை இருந்ததாகவும், குலைந்து மேல் எறும்பு மொய்த்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தான் அந்த  பெண் விரைந்து போய் மீட்டிருக்கிறாங்களாம். 

மீட்கப்பட்ட குழந்தை உடனே பூந்த மல்லி அரசமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குழநதைகள் னால மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குழந்தையை யார் அங்கெ போட்டுள்ளதாக போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.