குவைத்திலிருந்து படகில் தப்பிவந்த தமிழர்கள் சிறைக்காவலில்..

சட்டவிரோதமாக படகின் மூலம்  குவைத்தில் இருந்து மும்பைக்கு தப்பி வந்த 3 தமிழர்களை பொலிஸார்கைது செய்திருந்த நிலையில், 3 தமிழர்களின் விளக்கமறியலை மேலும் நீடித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்த வினோத் அந்தோணி (வயது29), சயா அந்தோணி அனீஷ் (29), ராமநாதபுரத்தை சேர்ந்த நிடிசோ டிடோ 2 ஆண்டுகளுக்கு முன் வேலைக்காக குவைத் சென்றனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேருக்கும் அவர்களின் உரிமையாளர் முறையாக சம்பளம் கொடுக்கவில்லை

பாஸ்போர்ட்டையும் அவர் பறித்து வைத்து இருந்தார். 3 தமிழர்களும் தங்கள் நிலைதொடர்பாக அந்நாட்டுகாவல்துறை மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு அளித்தும் பலன் கிடைக்கவில்லை.

எனவே 3 பேரும் கடந்த மாதம் 28-ம் திகதி உரிமையாளரின் படகில் குவைத்தில் இருந்து தப்பித்தனர். அவர்கள் சவுதி அரேபியா, கத்தார், துபாய், ஒமன், பாகிஸ்தான் கடல் வழியாக இந்தியாவின் மும்பைவந்தடைந்தனர்.

பொலிஸ் காவல் முடிந்ததால் தமிழர்கள் 3 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும் சிறையில்அடைக்கப்பட்டனர்