தமிழக இளைஞனுக்கு அடித்த லக்
தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பிரபல கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லொட்டரியில் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பிரபல கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லொட்டரியில் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இந்நிலையில் கேரள அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட்டை அறிவித்தது.
இந்த ஆண்டே அதிக கிறிஸ்துமஸ் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் பரிசாக ரூ.20 கோடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா 1 கோடி ரூபாய், 10 வரை பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன.
இதனால், பொதுமக்கள் லொட்டரி டிக்கெட்டை வாங்கி குவித்தனர்.
இந்த கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லொட்டரிக்கான இரண்டாம் பரிசான 1 கோடி ரூபாயை தமிழகத்தை சேர்ந்த இளைஞர் இன்பதுரை (24) வென்றுள்ளார்.
இவர் தமிழக மாவட்டம், மதுரையில் உள்ள கடைவனகல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு தாய், ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளாக கேரளாவில் உள்ள கோடமாம் கீர்த்தி பர்னிச்சர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், தினமும் ரூ.200 க்கு லொட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்தவகையில் கோட்டமத்தில் லொட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் பவுலஸ் என்பவரிடம் 2 லொட்டரி டிக்கெட்டுகள் வாங்கிய நிலையில் அதில் ஒன்றிற்கு இந்த மெகா பரிசு கிடைத்துள்ளது.