செல்லப்பிராணிகளுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்கள்
சீனாவில் வயோதிப பெண்ணொருவர் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைக்கு எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் வயோதிப பெண்ணொருவர் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைக்கு எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சில வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன்படி, சீனா - ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.
குறித்த வயோதிப பெண்தனக்கு சொந்தமான சுமார் 23 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை முதலில் தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில் அந்த வயோதிப பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது குழந்தைகள் மூவரும் அவரை புறக்கணித்தமை அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கோபமடைந்த அடைந்த அவர் தனது சொத்து மதிப்புக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைக்கு எழுதி வைத்துள்ளார்.
இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.