ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில் ஒருவர் பலி
ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையிலே பாதிக்கப்பட்ட நோயாளி பரிதாபமாக இறந்திருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார்.
இந்நிலையில் அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது.
பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், ’டா வின்சி’ எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது.