இந்திய பிரதமரை மிரளவைத்த ஸ்ரீநிதா

சத்தியம் சிவம் சுந்தரம்'என்ற பாடலை சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-9 இல் வெற்றியாளர் ஸ்ரீநிதா பாடி அசத்தியுள்ளார்.

இந்திய பிரதமரை மிரளவைத்த  ஸ்ரீநிதா


இந்திய பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் 'சத்தியம் சிவம் சுந்தரம்'என்ற பாடலை சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-9 இல் வெற்றியாளர் ஸ்ரீநிதா பாடி அசத்தியுள்ளார்.

டெல்லியில் அண்மையில் பொங்கல் திருவிழா நடைபெற்ற வேளையே இவர் இந்த பாடலை மேடி முன்னிலையில் பாடியுள்ளார்.

இவரது குரல் வளத்தையும் இனிமையையும் பாராட்டிய மோடி, “மிக அருமையாக பாடினாய். மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திரமோடி அணிந்திருந்த சால்வையையும் ஸ்ரீநிதாவுக்கு அளித்துள்ளார்.

இந்நிலையில்  “டெல்லி சென்று அங்கே பிரதமர் முன்னிலையில் பாடி, அதற்கு பிரதமரிடம் பாராட்டும் பரிசும் கிடைத்தது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என ஸ்ரீநிதா கூறியுள்ளார்.