நெடுஞ்சாலை முழுவதும் காணப்பட்ட மனித சடலங்கள்! மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம்  நெடுஞ்சாலை ஒன்றில் மனித சடலத்தின் பாகங்கள் கிடப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் நெடுஞ்சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் காணப்பட்ட  சடலத்தின் பாகங்களை மண்வெட்டி மூலம் பொலிஸார் அகற்றியுள்ளனர்.

இரவு முழுவதும் பல வாகனங்கள் உடல் மீது ஏறி பயணித்துள்ளதால் உடற்பாகங்கள் நெடுஞ்சாலை முழுவதும் ஒட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணையின் போது சடலத்தில் விரல் ஒன்றினை மட்டுமே பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த விரலின் ஊடாக சடலத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த பகுதியில் இரவு நேரத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பனிமூட்டத்துடன் வாகனங்கள் பயணித்துள்ளன. இதனால் பலர் சடலம் கிடப்பது தெரியாமல் வாகனம் ஓட்டியதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

உயிரிழந்தவர் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.