யாழில் தமிழர் பெருவிழா ஆரம்பம்
யாழில் தமிழர் பெருவிழா 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
யாழில் தமிழர் பெருவிழா 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
யாழ். சர்வோதய மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
யாழ். கலையகம், உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், யாழ்ப்பாணம் தமிழ் இசைச்சங்கம், சென்னை கவிஞர்- முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் ஆகியன இணைந்து இந்த பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளன.
மேலும் மணிமேகலை அமுதசுரபி பெற்ற இலங்கை மணிபல்லவத் தீவில் 120 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஈழத் தமிழுலகின் வரகவி நயினை நாகமணிப் புலவர் இயற்றிய நயினை மான்மியம் என்ற மகாகாவியம், முனைவர் ந.சுலோச்சனா சகாதேவன் எழுதிய உரையுடன் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.