சினிமா பாணியில் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வைத்தியம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றின் விசேட கலந்துரையாடலில் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.