ரணில் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கும் சாணக்கியன்
இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்னர் ஒரு நபராகவும், வந்த பின் வேறொரு நபராகவும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் தன் வசம் இல்லாத போது ஜனாதிபதியின் சிந்தனைகள் அனைத்தும் ஜனநாயகம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் ஊடக சுதந்திரம் பற்றியே இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சிந்தித்த ரணிலின் அரசாங்கத்திலேயே இன்று நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.