இலங்கைவாழ் பெண்களுக்கு விசேட பாதுகாப்பு

இலங்கைவாழ் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும்

இலங்கைவாழ் பெண்களுக்கு விசேட பாதுகாப்பு

இலங்கைவாழ் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்றிட்டமூடாக 109 எனும் புதிய விசேட இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இலக்கத்திற்கு அளிக்கப்படும் முறைப்பாடுகளுக்கு 48 மணித்தியாலங்களில் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடை காவல் பிரிவுக்குட்பட்ட சமூக காவல் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.