கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை படகு! அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கை படகு ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை படகு! அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கை படகு ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதன்படி,  “லோரென்சோ புதா 4” என்ற நெடுநாள் படகை விடுவிப்பதற்காக பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது.

கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.