தீக்கிரையாக்கப்பட்ட ஜனாதிபதியின் வீடு:ஒருவர் அதிரடி கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான உள்ள இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்
கொள்ளுப்பிட்டியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான உள்ள இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகளை நீதிமன்றில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.