விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் பலர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் 943 பேர் கைது
யுக்திய விசேட சோதனை நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 943 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 25 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐஸ் ரக போதைப்பொருள், ஹெரோயின், கேரள கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்கள் குறித்த கைது நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளன.