ஐக்கிய மக்கள் சக்தியில் மீண்டும் குழப்பம்
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள்
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரிகை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுதல், கட்சி தலைவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தல் மற்றும் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை விமர்சித்தால் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்குமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.