தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு விஜயம்
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதரவுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருடன் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்விலும் அவர் பங்குபற்றவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.