அரசியலில் ஈடுபட்ட விஜயிற்கு நாமலின் வாழ்த்து
இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலக நட்சத்திரமான நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச தமிழக நடிகர்கள் எவரையும் நேரடியாகச் சந்தித்திருக்காத நிலையில் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருப்பதை பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் திராவிடம் என்று கூறப்படாத தமிழகத்தை மாத்திரம் முதன்மைப்படுத்தி “தமிழக வெற்றிக் கழகம்“ என்ற கட்சியை விஜய் ஆரம்பித்திருக்கும் பின்னணியில் நாமல் ராஜபக்ச பாராட்டியுள்ளார்.