பட்டியொன்று கழுத்தில் இறுகியதில் சிறுவன்

நுவரெலியா – மாகஸ்தோட்டை பகுதியில் மரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டியொன்று இறுகியதில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

பட்டியொன்று கழுத்தில் இறுகியதில் சிறுவன்

நுவரெலியா – மாகஸ்தோட்டை பகுதியில் மரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டியொன்று இறுகியதில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

 12 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளையாடுவதற்கு சென்றிருந்த குறித்த சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்தமையினால் வீட்டார் அவரை தேடியுள்ளனர்.

அதன்போது, மரமொன்றில் கட்டப்பட்டிருந்த பட்டியொன்றில் கழுத்து இறுகியிருந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் மரணம் விபத்தா? அல்லது திட்டமிட்ட செயலா? என்பது தொடர்பில் இதுவரையில் உறுதிப்படுத்தப்படாத நிலையில் நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.