இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்  கைச்சாத்து

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்  கைச்சாத்து

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர விமான சேவைகளை வழங்குவதற்கான புதிய இருதரப்பு ஒப்பந்தமொன்றும் இதன்போது கைச்சாத்தாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.