12 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

சம்மாந்துறையில் வீதி விபத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

சம்மாந்துறையில் வீதி விபத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்னால் உள்ள வீதியை கடந்து,  அருகிலுள்ள  தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து  அம்பாறையை நோக்கி   வந்த  கென்டர் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய கென்டர் ரக வாகனத்தை  செலுத்தி வந்த  சாரதி  கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.