படுகொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

அஹுங்கல்லவில் நேற்று (01) துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

படுகொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

அஹுங்கல்லவில் நேற்று (01) துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அஹுங்கல்ல கரிஜ்ஜபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாலமொன்றுக்கு அருகில் இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

அந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதாள உலக உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியான “மஞ்சு” என அழைக்கப்படும் குசும் குமார மென்டிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.