வாகனம் வாங்குபவர்களுக்கான அறிவிப்பு
வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்கள் விரைவில் தங்களது பெயரில் பதிவு செய்யுமாறு மீண்டும் ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்கள் விரைவில் தங்களது பெயரில் பதிவு செய்யுமாறு மீண்டும் ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இந்த விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சிசிடிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் கடிதம் அனுப்பும் திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்திருப்பது முக்கியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் வாகனத்தின் புதிய உரிமையாளர் மற்றும் பழைய உரிமையாளர் இருவரும் சிரமத்தைத் தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.