விளையாட்டில் முடிந்த விபரீதம்! சிறையில் நடந்த கொடுமை

திருகோணமலை சிறைச்சாலையில் இருவர் இரு கைதிகளுக்கு இடையே கிச்சி மூட்டியமை சம்பவம் தீவிரமடைந்து கொலையில் முடிந்துள்ளது.

விளையாட்டில் முடிந்த விபரீதம்! சிறையில் நடந்த கொடுமை

திருகோணமலை சிறைச்சாலையில் இருவர் இரு கைதிகளுக்கு இடையே கிச்சி மூட்டியமை சம்பவம் தீவிரமடைந்து கொலையில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது கைதி ஒருவர் மற்றைய கைதியை தூக்கி தரையில் அடித்தமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கிண்ணியா மஹரூப் நகரைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

​​தாக்குதலுக்கு உள்ளான கைதி சிமெண்ட் தலையில் அடிபட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட கைதியும், கொலையைச் செய்த கைதியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இருவரும் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.