எம்பிலிப்பிட்டியவில் பாலம் இடிந்து வீழ்ந்து பரபரப்பு
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று பாலத்தை கடக்கும் போதே பாலம் இவ்வாறு இடிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும்,
மேற்படி வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.