கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும்
இந்த ஆண்டு முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சு இந்த விடயத்தினை அறிக்கை ஒன்றின் மூலமே வெளியிட்டுள்ளது.
இதேவேளை, 2023ஆம் கல்வியாண்டுக்கான 3 ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவுறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.