சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோர விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா. ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோர விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா. ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார். 

இவர்  சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா நேற்று ஹெலிகொப்டரில் பயணம் மேற்கொண்டார். 

குறித்த ஹெலிகொப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர்.

இந்நிலையில் லகோ ரங்கொ அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் 74 வயதான சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா உயிரிழந்தார். 

ஹெலிகொப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.