புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு

புத்தளம் - மஹகும்புக்கடவல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று பதிவாகியுள்ளது.

புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு

புத்தளம் - மஹகும்புக்கடவல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குமாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காயமடைந்த நபர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.