யாழ்ப்பாணத்தில் பீதியை கிளப்பிய பாகிஸ்தான் பிரஜை... மடக்கிய பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் குறித்த பாகிஸ்தான் பிரஜை  பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த பொருட்களுக்கான பணத்தை செலுத்த முற்பட்ட சமயம் சந்தேகம் ஏற்பட நிலையில் விசாரணை செய்ய முற்பட்ட போது அவருடன் வருகைதந்த சக பாகிஸ்தான் பிரஜை தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் தான் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கை வந்ததாகவும் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளார்

தப்பி ஓடி பாகிஸ்தான் பிரஜை தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.