நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்

தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் பே ஹியூன்-ஜின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்

 தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் பே ஹியூன்-ஜின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நிலவி வருகின்றது.

இந்நிலையில் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினரான பே ஹியூன்-ஜின் (Bae Hyun-jin) தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு,பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பே ஹியூன்-ஜின் (Bae Hyun-jin )தரப்பிலிருந்தும், இவரது கட்சி தரப்பிலிருந்தும் உடனடியாக பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

இதேவேளை, தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் ஜனவரி தொடக்கத்தில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு மேல் சிகிச்சைக்காக வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.