கடும் குளிரால் அவதியுறும் கனேடிய மக்கள்
கனடாவில் தற்போது கடும் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.
கனடாவில் தற்போது கடும் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.
குறித்த காலநிலை காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இந்நிலையில் ஒட்டாவாவில் பகுதியிலும் ஏனைய இடங்களைப் போன்று மிக மோசமான குளிருடனானவானிலை பதிவாகவில்லை.
எனினும் எதிர்வரும் நாட்களில் மறை ஐந்து பாகை செல்சியஸை விடவும் அதிக குளிருடனான காலநிலையைஎதிர்நோக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சராசரியாக மறை 9 பாகை செல்சியஸ் முதல் மறை 16 பாகை செல்சியஸ் வரையில்குளிர் நிலவும் என கனேடிய சுற்றாடல் முகவத்தின் வானிலை ஆய்வாளர் பீட்டர் கிம்பல் குறிப்பிட்டுள்ளார்.
கடும் குளிருடானான வானிலையில், வீடற்றவர்களுக்கு போதியளவு வசதிகளை செய்து கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.