புத்தள மக்களால் விரட்டப்பட்ட இராஜாங்க அமைச்சர்
புத்தளத்தில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கலந்துகொள்ள சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை அந்தப் பகுதி மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
புத்தளத்தில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கலந்துகொள்ள சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை அந்தப் பகுதி மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வருகை குறித்து அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பில் ஈடுபடுள்ளனர்.
குறித்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இராஜாங்க அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயதுன்னவும் இணைந்து கொள்ளவிருந்தார்.
அரசியல்வாதிகளின் வருகை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படை அந்தப் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலக வங்கியின் நிதியுதவியுடன் புத்தளம் மாவட்டத்தின் தலுவ நிர்மலபுர நாவக்காடு உள்ளிட்ட வீதி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தளுவ கிராம மக்கள் நிர்மலபுர கத்தோலிக்க தேவாலய மைதானத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன், அரச அதிகாரிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.