திருமணத்திற்கு தயாராக உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

திருமணங்கள் மற்றும் வேறு வைபவங்களை நடத்தும் விழா மண்டபங்களுக்கான முற்பதிவு கட்டணங்களை அதிகரிக்க இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருமணத்திற்கு தயாராக உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

2024ஆம் ஆண்டு திருமணங்கள் மற்றும் வேறு வைபவங்களை நடத்தும் விழா மண்டபங்களுக்கான முற்பதிவு கட்டணங்களை அதிகரிக்க இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் முற்பதிவுகளுக்கான கட்டணத்தை  வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அகில இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டில் உள்ள வேறு துறைகளின் பொருளாதார வளர்ச்சியும் 50 வீதத்தால் குறைவடைந்து செல்லும் நிலையே காணப்படுகிறது.

இந்நிலையில் மரக்கறிகள் மாத்திரமின்றி அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதால், நட்டத்தை ஈடு செய்ய முடியாத நிலைமையே விழா மண்டப உரிமையாளர்களுக்கு உள்ளனர்.

திருமண மண்டபங்கள், விழாக்களுக்கான மண்டபங்கள் என்பனவற்றுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் தமது தொழில்சார் உறுப்பினர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையை கருத்திற்கொண்டு முற்பதிவுகளுக்கான கட்டணங்களை 10% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.