வாக்காளர் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டதாக டி.என்.ஏயின் மூத்த உறுப்பினர்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் தான் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் தான் புறக்கணிக்கப்பட்டதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து முல்லைதீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திலேயே வசித்து வரும் குறித்த உறுப்பினருக்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருப்பதாக நேற்று (20.01.2024) இரவு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வாக்களிப்பதற்காக திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு அவர் வருகை தந்தபோது வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்பது குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் உறுப்பினர் பாடசாலை காலத்திலிருந்தே தமிழரசு கட்சியுடன் பயணித்து வந்துள்ளதாகவும் இவ்வாறான விடயங்கள் மனதுக்கு வேதனை அளிக்கிறது எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.