போதைக்கு அடிமையாகிய இளைஞன் பலி

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

போதைக்கு அடிமையாகிய இளைஞன் பலி

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த பகுதிய சேர்ந்த  27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையின் போது , இளைஞன் ஹெரோயினுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த ஏனைய இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறித்த இளைஞன் நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், மீண்டும் போதைக்கு அடிமையாகி இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.