அயோத்தியில் நாளை கலைக்கட்டும் கும்பாபிஷேகம்
ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்டமான ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்டமான ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் திங்கட்கிழமை (22) இடம்பெறவுள்ளது.
இந்த பிரமாண்டமான ஆலயத்திற்கு இந்தியப் பிரதமர் நேரந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி பொலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மேலும், சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆலய அறக்கட்டளை அழைப்புகளை அனுப்பியுள்ளது.