பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையின்மை பிரச்சினை
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7% ஆக காணப்படட் நிலையில் இரண்டாவது காலாண்டில், 5.2% ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 15-24 வயதுடைய இளைஞர்களில் 25.8 சதவீதமானோர் வேலையை இழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.