பிக்குவின் மனிதாபிமற்ற செயல்!
வயோதிப பிக்கு ஒருவர், 16 வயதான இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம்
கரஹம்பிட்டிஹல பகுதியில் வயோதிப பிக்கு ஒருவர், 16 வயதான இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனார்.
குறித்த இளம் பிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், சட்ட வைத்திய அறிக்கை கிடைக்கும் வரை சந்தேக நபரை கைதுசெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.