வட - கிழக்கு மக்களின் பிரச்சினை பேசப்படும் போது ஆராயப்படாத மலையக மக்களின் வாழ்க்கை

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை

வட - கிழக்கு மக்களின் பிரச்சினை பேசப்படும் போது ஆராயப்படாத மலையக மக்களின் வாழ்க்கை

இலங்கை, பொருளாதார துறையில் பாரிய முன்னேற்றமடைய பங்காற்றிய மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சாட்டியுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் அழுத்தத்தினாலேயே வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் பேசப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையக மக்களுக்கு நடத்தப்பட்ட அநீதிகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டின் இனப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.