தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகள் சுகயீனம்
தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி
பாணந்துறை பாடசாலை ஒன்றில் தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (07) பாடசாலை இடைவேளையின் போது குறித்த பெண் ஆசிரியைகள் தேநீர் அருந்தியதாகவும், இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சுகவீனமுற்ற 6 பெண் ஆசிரியைகள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.