பொலிஸாரை தாக்கிய சீன பெண்
சீனப் பெண் ஒருவர் வீசா இன்றி நாட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற
சீனப் பெண் ஒருவர் வீசா இன்றி நாட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை மங்கள வீதியில் உள்ள வீடொன்றில் சீனப் பெண் ஒருவர் செல்லுபடியான வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அங்கு சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட உரையாடலின் விளைவால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரான பெண்ணை களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.