பிறந்த சிசு பலி
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் திங்கட்கிழமை பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் திங்கட்கிழமை பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் குழந்தைக்கு மாலை வேளையில், தாயார் பால் கொடுத்த போது குழந்தைக்கு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையின் தாய சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
மேலும் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.