ஹக்க பட்டாஸ் வெடித்து சிறுவன் படுகாயம்
இங்கிரிய - ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இங்கிரிய - ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் மேலும் இரு சிறுவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த 7 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, டயர் ஒன்றிற்குள் ஹக்க பட்டாஸ் ஒன்று காணப்பட்டதாகவும், அதனை நசுக்க முற்பட்ட போது வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.