ஆனந்த் அம்பானி திருமண விழாவில் தோனி பங்கேற்பு
இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் கடந்த 1ஆம் திகதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.
ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கியுள்ளது. இங்கு ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.