சி. சிறீதரன் மீது தாக்குதல்
தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அடாவடியை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக A9 வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.