இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்

நாட்டிற்கு சுமார் ஆயிரம் வான்களையும், கார்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகசுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்

நாட்டிற்கு சுமார் ஆயிரம் வான்களையும், கார்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகசுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

அவர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பிரேரணைகள்அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, சுமார் ஆயிரம் வான்களையும், கார்களையம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம்என சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது பற்றி அரசாங்கம்ஆராய்ந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாணடோ தெரிவித்துள்ளார்.