பொலிஸாரின் CCTV திட்டத்திற்கு கெமுனு போர்க்கொடி
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று கூறினார்.
மேலும், பொலிஸாரின் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பஸ்களை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் பஸ் முன்னுரிமைப் பாதை சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்கள் பஸ் பாதையில் பயணிப்பதால் பஸ்களை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.