அதிக வறட்சி காரணமாக ஏற்படபோகும் அபாயம்

நாட்டில் நிலவிவரும் அதிக வறட்சி காரணமாக, தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்த அறிவுறுத்தலின் படி தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளது. 
 
உயரமான பிரதேசங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு குழாய் மூலம் வரும் நீரை மட்டுமே பெறுவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, குடியிருப்புக்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் செயற்பாடுகளுக்கென வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.